ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் திறப்பு. முதுமக்கள் தாழியில் 3000 ஆண்டுகள் பழமையான மண்டை ஒடுகள், பற்கள் கண்டுபிடிப்பு.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதல் கட்டப்பணியாக பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த 3 மாத காலமாக நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் முன்னிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் 3000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், தாடை, பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முதுமக்கள் தாழியில் கண்டுபிடிக்கப்பட்ட தாடை மற்றும் பற்கள் மூலம் ஆதி மனிதனின் காலத்தையும் வாழ்க்கை முறையையும் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.