செய்துங்கநல்லூர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ அவர்களிடம் கடந்த 22.03.2025 அன்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் மற்றும் கருங்குளம் யூனியன் அலுவலக மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என மனுகொடுத்தார். அந்த மனுவை ஏற்று எம்.எல்.எ 8 லட்ச ரூபாய் பண ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதற்கிடையில் அடிக்கல் நாட்டும் போது அங்கிருந்தவர்கள் பள்ளிவாலில் எதிர்ப்பு உள்ளது என்று கூறி சுமார் 1 பர்லாங் தொலைவில் காட்டு பகுதியில் அடிக்கல் நாட்டினர். இதனால் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜமாத்தை சேர்ந்தவர்கள் இது பொய்யான தகவல் எனவே பள்ளிவாசல் முன்பு பஸ் நிலையம் கட்ட எந்தவொரு எதிர்ப்பும் இல்லை என கடிதம் கொடுத்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பள்ளிவாசல் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு ஆயத்த பணி துவங்கியது. அதன் பின் மழை பெய்த காரணத்தினால் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
கடந்த மாதம் பள்ளி வாசல் பகுதியை விட்டு விட்டு காட்டுப்பகுதியில் பஸ் நிலையம் கட்ட அஸ்பதிவாரம் தோண்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளிடம் கேட்ட போது முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆகவே நாங்கள் இவ்விடத்தில் பணி செய்கிறோம் என கூறினர்.
இதனால் கூடுதல் அதிர்ச்சி அடைந்த ஜமாத்தார், நாங்கள் தானே கோரிக்கை வைத்து பஸ் நிறுத்தம் கேட்டோம், நாங்களே எப்படி எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என மீண்டும் ஆணையாளரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனாலும் அதிகாரிகள் கேட்க வில்லை. இதனால் ஜமாத்தைசேர்ந்தவர்கள் சண்முகையா எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் நேரில் சென்று சந்தித்தனர். எங்களுக்கு பள்ளிவாசல் முன்புத்தான் பஸ்நிலையம் கட்டவேண்டும். என்று கூறினர். அவரும் பள்ளிவாசல் அருகில் தான் பஸ் நிலையம் கட்டப்படும் என உறுதி அளித்தார்.
இந்த கருத்தை வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியருக்கு மனு அனுப்பினோம். எங்களுக்கு உதவியாக வியாபாரி சங்கத்தினை சேர்ந்தவர்கள், கம்னியூஸ்ட் கட்சி காரர்களும், ஊர் பொதுமக்கள் குரல் எழுப்பினர். ஆயினும் கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் காட்டுக்குள்தான் எங்களுக்கு ஆட்சியர் அனுமதி கொடுத்துள்ளார். அங்குதான் கட்டுவோம் என்று உறுதியாக கூறினார். இதனால் நாங்கள் பணி கட்டக்கூடாது என மறியல் செய்து பணியை நிறுத்தியுள்ளோம். தொடர்ந்து பணி செய்தால் ஊர் மக்கள் கூடி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்.
எம்.எல்-.ஏ ஒதுக்கீட்டில் தான் இந்த பணி நடக்கிறது. எம்.எல்.ஏ இரண்டு தடவை பள்ளி வாசல் அருகே கட்டுங்கள் என சொல்லியும் திட்டமிட்டு மக்கள் பயன்பாடு இல்லாத இடத்துக்கு பஸ் நிலையத்தினை கட்ட முயற்சி செய்கிறார்கள். இதனால் அரசு பணம் 8 லட்சம் வீணாகி போய்விடும். திட்ட மிட்டு அரசின் பெயரை கெடுக்க இதுபோன்ற நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கிறார்கள் . எனவே உடனே இந்த பணியை நிறுத்தி பள்ளி வாசல் அருகில் பஸ் நிலையத்தினை கட்ட வேண்டும் . என்று ஜமாத்தார் கோரிக்கை வைத்தனர்.
மேலும் அவர்கள் சார்பில் கூறும் போது, செய்துங்கநல்லூர், வி.கோவில் பத்து, விட்டிலாபுரம் பஞ்சாயத்து ஆகிய மூன்று பகுதி மக்கள் இணைந்து கூடும் இடம் செய்துங்கநல்லூர் புதிய பள்ளிவாசல். இவ்விடத்தில் தான் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. சுந்தர் நகர் , விட்டிலாபுரம் பஞ்சாயத்து ஏ.வி.ஏ நகர் , நேசமணி நகர் உள்பட பல புதிய நகர்கள் இந்த இடத்தில் தான் உருவாகி வருகிறது. மேலும் ரயில் நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி, பி.எட்.கல்லூரி, தபால் நிலையம் உள்பட பல அலுவலங்களும் இங்கே தான் உள்ளன. இந்த இடத்தில் சாலை அகலபடுத்தும் முன்பு பஸ் நிறுத்தம் இருந்தது. தற்போது இங்கு பஸ் நிறுத்தம் இல்லாத காரணத்தினால் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்துக்கு என ஒரு பேருந்து நிலையம் இல்லாமல் போய் விட்டது. இதனால் பயணிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள 42 கிராம மக்கள் பயனடையாவர்கள். அதோடு மட்டுமல்லாமல் 32 பஞ்சயாத்துக்குரிய யூனியன் அலுவலகம் பழைய கட்டிடம் நிறுத்தப்பட்டு, புதிய கட்டிடம் தற்போது பள்ளிவாசலுக்கு எதிரில் வந்து விட்டது. இதனால் புதிய பேருந்து நிறுத்தம் ஒன்றை திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ஏறிச்செல்ல நெடுஞ்சாலை துறையினர் ஒருநிழல் குடை அமைத்துள்ளனர். அதன் எதிரில் தான் பள்ளி வாசல் உள்ளது. அங்கே தான் நாங்கள் பேருந்து நிறுத்தம் கேட்டு இருந்தோம். ஆனால் அதை விட்டு விட்டு வேண்டுமென்றே இடத்தினை மாற்றி விட்டார்கள். இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. எனவே உடனடியாக தற்போது அஸ்திபாரம் தோண்டிய இடத்தினை விட்டு விட்டு பள்ளிவாசல் முன்பு பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும். இல்லையென்றால் அனைத்து தரப்பு பொதுமக்களை கூட்டி தொடர் போராட்டம் நடத்துவோம். அதற்கு அனுமதி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்று கூறினார்கள்.
ஆனாலும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் திரண்டு சென்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களிடம் மனுகொடுத்தனர். அவர் இதற்காக அதிகாரிகளை நியமித்து சம்பந்தப்பட்ட இடத்தினை பார்வையிட கூறினார். ஆனாலும் அதிகாரிகள் பார்வையிடவில்லை. இதனால் கம்னியூஸ்ட் கட்சியினர், ஜமாத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கருங்குளம் ஒன்றிய அலுவலகம்முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனாலும் கருங்குளம் ஒன்றிய அலுவலகம் சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதற்கிடையில் இன்று 29 ந்தேதி காலை முதல் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். இதில் கம்னியூஸ்ட், ஜமாத், வியாபாரிசங்கம் , உதவும் உள்ளங்கள் மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர். இது குறித்து கேள்விப்பட்டவுடன் ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா மக்களிடம் பேச்சுவார்த்தை நட வருகை புரிந்தார். அவர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது ஒன்றிய ஆணையாளர் ஜான்சிராணி, கூடுதல் ஆணையாளர் ராஜா ஆறுமுகநயினார், கருங்குளம் வட்டார திமுக செயலாளர் ராமசாமி உள்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அந்த சமயத்தில் மக்களுக்காகவே அரசு திட்டம் உள்ளது. எனவே மக்கள் கோரிக்கை வைக்கும் இந்த இடத்திலே பஸ் நிலையம் கட்டப்படும் என உறுதி கூறினார்.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி கூறினர்.


