செய்துங்கநல்லூரில் உதவும் உள்ளங்கள் மக்கள் நலச் சங்க அலுவலக துவக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் மாரிசுடலை தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆறுமுக நயினார் வரவேற்று பேசினார். அலுவலகத்தினை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹிர் அகமது திறந்து வைத்தார். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சி ராணி, ராஜா ஆறுமுகநயினார், செய்துங்கநல்லூர் ஆர்.சி. பங்கு தந்தை ஜான்சன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள் . நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சந்நியாசி, துணைச்செயலாளர் இம்ரான்கான், நிர்வாக குழு உறுபபினர்கள் திருச்செல்வம், முருகேசன், முருகன், மாரியப்பன், வேம்பு, ஜாகிர் உசேன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.


