ஆழ்வார் திருநகரியில் வேளாண் தகவல் மையம் மற்றும் விவசாய ஆர்வலர் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும், வேளாண் விளைபொருளிலிருந்து மதிப்பு கூட்டும் பொருள் உற்பத்தி செய்யும் பிக்டோ நிறுவனத்தின் இயக்குநர் குற்றால ராஜன் இயற்கை முறையில் விளைவித்த விளைப்பொருட்களை சந்தை படுத்துவது தொடர்பாகவும், நீர் மேலாண்மை குறித்து நதி நீர் பாசன சங்க நிர்வாகி தாமிரபரணிசெல்வம், வேளாண்மையில் அரசின் நிலைபாடுகளை குறித்து கடம்பா குளம் பாசன சங்க தலைவர் சித்திரம் சாத்தான்குளம் வட்டார பொறுப்பார் சேதுராமலிங்கம் , வேளாண்துறை அலுவலர் கண்ணன் ,செந்தமிழ்க் கல்வி அறக்கட்டளை ஆலேசகர் ஆனந்தன், வல்லநாடு குழு தலைவர் தம்பான் ஆகியவர்கள் கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் ஆழ்வார்திருநகி வட்டாரத்தில் நன்ஞ்செய் தரிசு சாகுபடி பருவத்தில் பயிறு வகைப் பயிறுகள் இயற்கை முறையில் சாகுபடி செய்வது எனவும், விளைப்பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கச் செய்வது எனவும் திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.