தூத்துக்குடியில் மின்வாரியத்தின் அலட்சிய போக்கினால் ஏற்பட்ட உயிழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “கடந்த 25-04-2025 அன்று இரவு 11 மணியளவில் எனது தெருவில் மின் துண்டிப்பு ஏற்ப்பட்டது. என்ன காரணத்திற்காக மின் துண்டிப்பு ஏற்பட்டது என தெரியாததால் மின்நிலைய அலுவலகத்திற்கு அரசு கொடுத்த 94987 94987 இந்த எண்ணிற்கு தகவல் தெரிவிக்க முயன்றேன்.
பலமுறை தொடர்பு கொண்டும் இந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. நேரில் சென்று தகவல் கொடுக்க மின் அலுவலகத்திற்கும் சென்றேன். ஆனால், மின் அலுவலகத்திலும் பணியாளர்கள் யாரும் இல்லை. காலை 5 மணிக்கு எனது தெருவில் வசிக்கும் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டிற்கு முன்பு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இறந்துவிட்டார்.
முந்தைய இரவு நான் அழைத்த தொடர்பு எண் சரியாக வேலை செய்து மின் அலுவலகத்திலும் பணியாளர்கள் இருந்து என்னுடைய தகவலை கேட்டு இருந்தால், மின் துண்டிப்பு தகவலை நான் தெரிவித்து இருப்பேன் மின்நிலைய ஊழியர்களும் என்ன காரணத்தினால் மின் துண்டிப்பு ஏற்ப்பட்டது என கண்டறிந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்து இருப்பார்கள். ஆனால், இன்றே ஒரு உயிர்ப்பு ஏறப்பட்டு விட்டது. இந்த உயிரிழப்பானது முழுக்கல் முழுக்க மின்வாரியத்தின் அலட்சிய போக்கினால் ஏற்ப்பட்டதாகும்.


