ஆறுமுகநேரியில் பள்ளிகள், கோவில் அருகே மதுக்கடையோ, மதுபான கூடமோ அமைப்பதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடரபாக அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக மதுக்கடைகள் என்பதே இல்லை. தற்போது சில தனிநபர்கள், மனமகிழ்மன்றம் என்ற பெயரிலும், டாஸ்மார்க் கடை மற்றும் மதுகூடத்துடனும் கூடிய 4 கடைகள் கொண்டுவர முயற்சி செய்வதை அறிந்து, ஆறுமுகநேரி பகுதியைச் சார்ந்த சர்வ கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் திருச்செந்தூர் வட்டாட்சியரை நேரில் சந்தித்தும் 28ம் தேதி பிப்ரவரி முதல் மார்ச் 1ம் தேதி வரை மனு கொடுத்தோம் அதைத் தொடர்ந்து வட்டாட்சியர் அழைப்பின் பேரில் 19.03.2025 அன்று சர்வ கட்சியினர் மீண்டும் எங்களது ஆட்சேபனை நேரில் தெரிவித்தோம்.
அதன்பின் 23.03.2025 அன்று சர்வகட்சி, மற்றும் பொதுநல அமைப்பினர் சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி மதுக்கடைகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டி ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவரிடமும் 26.03.2025 அன்று மனுக் கொடுத்தோம். அதன்பின் 29.03.2025 மீண்டும் சர்வக் கட்சி மற்றும் பொதுநல அமைப்பினர் கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியாளரிடமும், டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் உதவி ஆணையர் கலால், மற்றும், நேரடியாக மனுக்கொடுக்க தீர்மானித்து 01.04.2025ல் அனைவரிடமும் மதுக்கடைகள் அமைக்க இருப்பதை தடுத்து நிறுத்த கோரி மனுக்கொடுத்தோம்.
அதை தொடர்ந்து மதுக்கடைகள் தொடங்க ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருநத்தால் 07.04.2025 அன்று மாலை மீண்டும் சர்வகட்சிகள், பொதுநல அமைப்புகள் கூட்டம் நடத்தி நமது கோரிக்கைகள் மீது அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டி 15.04.2025 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அதனைத் தொடர்ந்து 21.04.2025 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


