சாக்கடையை கட்டுபடுத்த முடியுமா? இது தாமிரபரணியின் தற்போது நடைபெற்று வரும் கேள்வி. நான் உயர் நீதி மன்றம் மதுரை கிளையில்கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்க கூடாது, தாமிரபரணி கரையில் உள்ள மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு செய்திருந்தேன். இந்த மனுவின் மீது கடந்த அக்டோபர் மாதம் 12 ந்தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர் . சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அமர்வு தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பின் படி சாக்கடை கலக்காத நதியாக மாற்ற மாநகராட்சி கமிசனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபம் மற்றும் படித்துறையை சீரமைக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். இதற்கிடையில் இந்த வழக்கு மீது மீண்டும் மதுரை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜி.ஆர் . சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் இந்த வழக்கினை விசாரித்தார்கள். என்னுடைய தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி ஆஜர் ஆனார். தாமிரபரணி குறித்த தீர்ப்புக்கான நடவடிக்கை என்ன எடுத்துள்ளார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதில் பதில் அளிக்க முடியாத உள்ளாட்சி அமைப்பு மீது படும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நெல்லை கமிஷனர் தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலப்பதை உடனே நிறுத்த முடியாதுஎன பேட்டி கொடுத்துள்ளார். ஆனாலும் நீதியரசர்கள் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா, உங்கள் வீட்டுக்குள் சாக்கடை வந்தால்சும்மா இருப்பீர்களா என கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது தான் குவைத் பகுதியில் கட்டிடங்களில் வரும் கழிவு நீரை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிந்தேன்.
இதற்கிடையில் எனது நண்பர் இருக்கன்குடியை சேர்ந்த முத்துகணேசன் துபாயில் வேலை பார்த்தார். அவர் அங்குள்ள ஏர்போர்டில் பணியாற்றினார். அங்கு அவர் சாக்கடையை எப்படி நல்ல நீராக மாற்றுகிறார்கள் என என்னிடம் கூறியிருந்தார். அதைத்தான் குவைத் மாநகரிலும் பயன்படுத்துகிறார்கள் என கேள்வி பட்டேன்.
அதைப் பற்றி முத்து கணேஷ் என்ன கூறினார்.
ஒரு பில்டிங் இருக்கிறது என்றால் அதன் அருகில் 100 அடி நீளம் 50 அடி அகலம் குழி தோண்டு வார்கள். அதில் சாக்கடை தண்ணீரை சேரிப்பார்கள். அதில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவியிருப்பார்கள். அந்த ஆலையில் திட உரத்தினை தனியாக பிரித்தெடுப்பார்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மரங்கள் வளர்க்கவும், பாலை வனத்துக்கும், பூங்காவுக்கு அனுப்பி வைப்பார்கள். இதற்காக காசு நிர்வாகம் வசூல் செய்து விடும் என்று கூறியிருந்தார்.
துபாய் , குவைத் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் இதுபோன்ற தொழில் நுட்பத்தினை பயன்படுத்துக்கிறார்கள். தாமிரபரணியில் திருநெல்வேலி கார்பரேசனில் மொத்தமே 17 இடங்களில்தான் சாக்கடை கலக்கிறது. இவ்விடத்தில் நாம் இந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தினால் தாமிரபரணியை சாக்கடை கலக்காத நதியாக மாற்றி விடலாம். இந்த கழிவு தண்ணீரை சுத்திகரித்து மரம் வளர்க்க பயன்படுத்தலாம். அல்லது தொழிற்சாலைக்கு விற்று விடலாம். இதுபோன்ற தொழில் நுட்பத்தினை ஏன் நமது மக்கள் பயன்படுத்த தவறுகிறார்கள் என எனக்கு வருத்தமாக இருந்தது.
யோசனையோடு நாம் நிற்கும் போதே சாமுவேல் வந்தார். அவர் எங்களை அழைத்துக் கொண்டு நாளை விழா நடக்கும் இடத்துக்கு கிளம்பினார்.
அல் சுமேரிடா அரங்கம் தான் நிகழ்ச்சி நடக்கும் இடம்.சாமுவேல் காரை ஓட்டிக்கொண்டே அங்கு கிளம்பினார். சுமார் 20 நிமிட பயணத்தில் இருவரும் விழா அரங்கிற்கு வந்து சேர்ந்தோம்.
அந்த அரங்கை பார்த்தோம். மிக பிரமமாண்டமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு அரண்மனை போலவே இருந்தது. நுழைவு வாயில் சிறியதாக இருந்தாலும் வெளியே இருந்து பார்க்கும் போது மிகப்பிரமாண்டாக இருந்தது.
அந்த அரங்கத்தில் மாடியில் மரங்கள் வளர்க்கப்பட்டிருந்தது. ஒருவேளை உண்மையான மரங்களாக இருக்குமோ என கேள்வி கேட்ட போது அவர் இல்லை இது செயற்கை மரம் என்று கூறினார்.
அரங்கம் முகப்பு வழியாக உள்ளே ஏறினோம். உள்ளே மிகப்பிரமாண்டமாக இருந்தது.
இந்த சமயத்தில் தான் தமிழ்நாடு குவைத் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பட்டியலை அசோக் அய்யா விடம் கேட்டேன். அவர் அவர்களுக்கான வெப்சைட் ஒன்றை என்னிடம் கொடுத்தார். அதன் படி உறுப்பினர்களை பட்டியிலிடலாம்.
கிருஷ்ண ஜெகன் – ஜனாதிபதி
அசோக் குமார் அருள்சாமி – பொதுச்செயலாளர்
பாலசுப்பிரமணியன் முத்தையா- துணைத்தலைவர்
சுப்பிரமணியன் சின்னத்துரை – நிதித்துறை செயலாளர்
கிஷோர் குமார் -இணைச்செயலாளர் (பொது)
ஆறுமுகம் – இணைச்செயலாளர் ( ஐ.டி)
சாமுவேல் -இணைப்பொருளாளர்
உறுப்பினர்கள்
அருண் கோல்டன் இனிகோ தாஸ்
பாலசந்திரன்
பாலாஜி ஜீவனாந்தம்
ஜெயம் பிரசன்னா
கோபிநாத் வீர ராகவன்
ஐஸ்டின் ஆண்டோ பிரசன்னா
கலையரசன் எம்.பி
கபில் துரைச்சாமி
காசி விஸ்வநாதன்
கார்த்திகேயன் இளங்கோவன்
முகம்மது ஹனிப்
மோகன் தாஸ்
ராஜா குழந்தை வேலு
சரவணன் ராமதாஸ்
வடிவேலன்
ஆனந்த ராஜ் ராமசந்திரன்
வாசுதேவன்
ஆகியோர் பெயர் பட்டியலை பார்த்தவுடன் சந்தோசமடைந்தோம்.
குவைத் மாநகரில் தமிழர்கள் மிகச்சிறப்பாக ஒரு சங்கத்தினை நடத்துகிறார்கள். என்பது எங்களுக்கு பெருமையாக இருந்தது.
அதோடு இவர்கள் நாளை நடத்தும் நிகழ்ச்சியும் மிகப்பிரமாண்டமாக இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்த போதே புரிந்தது.
உள்ளே நுழைந்தேபோதே பிரமாண்டமாக இருந்தது. உள்ளே அசோக் முழு வீச்சில் விழாவிற்கு அந்த அரங்கை ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அங்கு அமர்க்களமாக ஒலி ஒளி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
அங்கு வேலைகளைச் செய்யும் ஒருவர் பேராசிரியர் சுதாகரிடம் பேசினார். அவர் ஒரு எகிப்தியர். அரங்கின் ஒலி ஒளி ஏற்பாடுகான மின் இணைப்பை அமைத்துக் கொண்டிருந்தார்.
“எப்போது வந்தீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்?” என்ற சம்பிரதாய கேள்விகளை அவரிடம் கேட்டார்.
அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர்
“எகிப்த்தையும் தமிழகத்தையும் இணைத்துப் பேசவே இங்கு வந்துள்ளேன்” என்றார் முனைவர் சுதாகர். மகிழ்ச்சியடைந்தார் அந்த மனிதர்.
எகிப்தியர் பேசும் ஆங்கிலம் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தது காரணம் அவர்களின் உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் முனைவர் சுதாகர் அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவர் பேச்சுக்கு பதில் கூற வசதியாக இருந்தது. எனவே இருவரும் சளைக்காமல் உரையாற்றிக்கொண்டிருந்தார்கள்.
மிகப்பிரமாண்டமான எல். இ.டி . அதற்கு இசை வழக்க பிரமாண்டமான இசை வழங்கும் இயந்திரனங்கள் என பிரமாண்டமாக வேலை நடந்து கொண்டிருந்தது.
நமது ஊரில் விஜய் தொலைக்காட்சி, ஜி தமிழ், சன் டிவில் நிகழ்ச்சி நடத்தினால் எத்தனை ஏற்பாடுகள் செய்வார்களோ. அந்த அளவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
நாங்கள் நாளைக்கு கண்காட்சி வைக்கும் இடம் எது என தேடினோம். சாப்பாடு நடக்கும் இடத்தில் நடுவில் அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. நாங்கள் அந்த இடத்துக்கு தக்க நாங்கள் கொண்டு வந்த தொல்லியல் சம்பந்தப்பட்ட படங்களை அடுக்க தயாரானோம்.
அதில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை உள்பட பல தொல்லியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்தோம்.
அந்த நேரத்தில் அசோக் அய்யா எங்களை சந்தித்தார். நாங்கள் கொண்டு வந்த என் புத்தகத்தினை முகப்பில் விற்பனைக்கு வைக்க வேண்டும் என ஏற்பாடு செய்தார். புகைப்பட கண்காட்சி வைக்கவும் இடத்தினை காட்டினார்.அதன்பின் ஏற்பாடுகளில் இறங்கி விட்டார். சாப்பாடு மற்றும் டீ – காப்பி ஏற்பாடுகளைச் சரி பார்த்துக் கொண்டும், விழாவில் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளை எப்படி நடத்தி முடிப்பது என்பதையும் சரி பார்த்துக் கொண்டிருந்தார். நாங்கள் வைத்திருந்த தகவல்களை பெற்றுக் கொண்டார்.?. நாளை நாங்கள் பேசும் போது காட்சி படுத்த வேண்டிய தகவல்கள் அந்த பென்டிரைவில்தான் இருந்தது.
அதை அவர் தனது கம்யூட்டரில் ஏற்றுக்கொண்டார். பிரமாண்டமான சேர்கள் தயாராக இருந்தது.
முதல் முதலில் வெளிநாட்டில் பேசப்போகிறோம். என்பதால் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவர்கள் செய்யும் ஏற்பாடு நாளை இந்த கூட்டத்தில் பேசப்போகிறோம் என்பது மனதுக்கு சந்தோசமாகவும் இருந்தது. .
அசோக் அய்யா எங்களை அழைத்தார். “சார் காலையில் சுமார் 6 மணிக்கு உங்கள் விடுதிக்கு வந்து விடுவேன். தயாராக இருங்கள்” என்றார்.
“சரி” என்றோம்
“இரவு என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்றார்.
“மதிய சாப்பாடு சற்று அதிகமாகிவிட்டது. இரண்டு இட்லி போதும்” என்றார் சுதாகர்.
“சரி சாமுவேல் உங்களுக்கு இட்லி வாங்கித்தந்து விடுதியில் விட்டு விடுவார்” என்றார்.
நாங்கள் அவரிடம் இருந்து விடைபெற்றோம். அதன் பின் அங்கிருந்து கிளம்ப தயாரோம்.
சாமுவேல் காரை கிளம்பினார். இருவரும் ஏறி அமர்ந்தோம். கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர். ஆனால் சாலை சரியாக இருந்த காரணத்தினால் 25 நிமிடத்தில் நாங்கள் தங்க வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.
நாங்கள் தங்கி இருந்து இடத்தில் சங்கீதா இட்லி தோசைக்கடை இருந்தது.
அங்கு சென்று எங்கள் இருவருக்கும் இரண்டு இட்லி பார்சல் வாங்கி கொண்டு எங்கள் அறைக்கு வந்தோம். ஒரு குளியல் போட்டு விட்டு சாப்பிட்டோம்.
சற்று நேரம் நானும் முனைவர் சுதாகர் அவர்களும் பேசிக்கொண்டிருந்தோம். நாளை நடைபெறும் நிகழ்ச்சில் பல நூறுபேர் கூடுவார்கள். அவர்கள் மத்தியில் எப்படி பேச வேண்டும். அவர்களை கவர பேசிவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். அலை பேசி மீண்டும் சிணுங்கியது.
“சார் தூங்கிடீங்களா? இன்னும் சற்று நேரத்தில் உங்கள் அறைக்கு வருகிறேன்’ என்றார் அசோக் அய்யா .
இரவு 12.15
சொன்ன மாதிரியே சிறிது நேரத்தில் ஹாலிங் பெல் அடித்தது. திறந்தோம். அசோக் அய்யா கையில் இருண்டு பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அவர் கையில் தங்க இழைகளைக் குங்குமத்தில் தோய்த்து நெய்யப்பட்ட எடுக்கப்பட்டது போல் நிறத் துணியில் தைத்த இரண்டு பட்டு சட்டையையும் வேட்டியையும் எங்களிடம் கொடுத்தார்.
“காலையில் இருவரும் இந்த உடையில்தான் வர வேண்டும்” என்றார்.
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் பொறியாளர்கள் சங்க விழா. அதுவும் 25 வது ஆண்டு விழா. ஆகவே எல்லோரும் கோர்ட் சூட்டில் வருவார்கள். அதற்கு ஏற்ப நாங்களும் உடை உடுத்த வேண்டும் என்று நினைத்து இருந்தோம். இதற்காக என் மனைவி பொன்சிவகாமியும், என் மகள் ஆனந்த சொர்ண துர்க்காவும் கடைகடையாக தேடி ஒரு சட்டைபேண்ட் எடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் இங்கே வித்தியாசமாக இருந்தது. ஆனால் மிகவும் பிடித்திருந்தது.
கடல் தாண்டி வந்த இடத்தில் எங்களுக்கு தமிழ் பாரம்பரியம் மிக்க வேஷ்டி சட்டை தந்திருக்கிறார்கள். அதுவும் எங்களோடு உறுப்பினர்கள் எல்லோரும் இதுபோலவே வேஷ்டி சட்டை அணியப்போகிறார்கள் என்ற போது சந்தோசமாக இருந்தது.
மீண்டும் சிரித்துக்கொண்டே “காலையில் 5.45க்கு எல்லாம் தயாராகிவிடுங்கள்” என்றார்.
நேற்று இரவும் அவர் சரியாகத் தூங்க வில்லை. பகல் முழுக்க பம்பரமாய் அங்கும் இங்கும் ஓடியாடி உழைத்துள்ளார்.
என்னிடம் மு¬வைர் சுதாகர் சார் கேட்டார்.
“இனிமேல் வீட்டிற்குச் சென்று தூங்குவாரா?” ஆச்சரியத்துடன் கேட்டார். ஆச்சரியம் தான். நாங்கள் குவைத்தில் கால் வைத்ததில் இருந்து இதுவரை பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் உறுப்பினர்கள் எல்லோருமே அவர்அவர்கள் ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சி நடத்துவது சாதரணமான விசயமாக என்ன?.
அவரை வழியனுப்பி விட்டு இரண்டு பேரும் போய் தூங்க கிளம்பினோம்.
அப்படியே போய்ப் படுக்கையில் சரிந்தாலும் அதிகபட்சம் மூன்றை மணிநேரம்தான் தூங்க முடியும்.
இந்த மனிதரைப் பார்க்கவே வியப்பாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது.
அதிகாலை 5.45க்கெல்லாம் எங்களை அழைக்க அவர் வந்து ஹாலிங் பெல் அழுத்தினார்.
நாங்களும் கிளம்பி, தமிழர் பராம்பரியமான வேஷ்டி சட்டையுடன் மிடுக்காய் அவருடன் கிளம்பினோம். அவரும் வேஷ்டி சட்டையில் இருந்தார்.
கீழே இறங்கி காரில் ஏறி, அரங்கில் மூவேந்தர்களாக போய் இறங்கினோம்.
(குவைத் பயணம் தொடரும்)