தூத்துக்குடி சிவன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி பெளர்னமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த வருடத்திற்கான அன்னாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சங்கர ராமேஸ்வரர் அண்ண அபிஷேகம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


