நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம் மடையை தூர்வாரும் பணி, இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புதுவாழ்வு சங்கம் சார்பில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள தேமான்குளம் மடை எண் 2, 3, ஆகியவற்றின் தூர்வாரும் பணி நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் புது வாழ்வு சங்கம் மூலம் நடைபெற்றது. இப்பணியை கிளமெண்ட் எபனேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊழிய சமூக சேவை பொறுப்பாளர் மனதில் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். மக்கள் தொடர்பாளர் சாந்தகுமார் முன்னிலை வைத்தார்.
இந்நிகழ்வில் தேமாங்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் வேல்முருகன், ஒப்படி சங்கத் தலைவர் சாதுலிங்கம், செயலாளர் நாகலிங்கம், பொருளாளர் செல்வம், துணை தலைவர் ராஜேந்திரன் மற்றும் செல்லதுரை, ஆறுமுக நயினார், செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கால்வாயின் மொத்த நீளம் 3 கிலோமீட்டர். இதன் மூலம் 225 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தங்கையாபுரம்,திருக்களூர், கடையனோடை ஆகிய ஊர்கள் பயன் பெறுகின்றன.


