தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி துவங்கிவைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார். அதன் அடிப்படையில் அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்டக்களுக்கும் பூத் கமிட்டி பணியை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளரை நியமனம் செய்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடி டிஎஸ்எப் கிரான்ட் பிளாஸா ஹாலில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளரும் , அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.ஜி.ராஜேந்திரன் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி வாரியாக கேட்டறிந்து, ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாநில நிர்வாகிகள் டாக்டர் ராஜசேகர், ஏரோமிஸ், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு, கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, பகுதி கழகச் செயலாளர்கள் முருகன், சேவியர், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, நகரச் செயலாளர்கள் மகேந்திரன், காயல்மௌலானா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


