வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2023 யை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி துவக்கி வைத்தார்.
பின்னர் அவர், பள்ளி மாணவ, மாணவியர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு, அதிகமான ஆய்வறிக்கைகளை சமர்பித்த பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சாந்தகுமாரி, முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


