
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி பகுதியில் தீயணைப்புத் துறையினர் சார்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு இயற்கை பேரிடர் உள்ளிட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்துத் தீயணைப்புத் துறை சார்பில் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சூறாவளி, பெரு வெள்ளம், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பது குறித்துத் தீயணைப்புத் துறையினர் செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்தனர். இதில் சாத்தான்குளம் வட்டாட்சியர் விமலா, சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன்,RI மஞ்சரி, செந்தூர் ராஜன், கிராம அலுவலர் சிவகாமி, கொமனேரி கவுன்சிலர் ப்ரெய்ன்லா கார்மல்,சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினர் போனிபாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.