திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட சிவராம மங்கலம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.அப்பன் கோவில் ஊராட்சி செயலாளர் தேவர்பிரான் தலைமை வகித்தார். நடுவண் ஒன்றிய செயலாளர் ஜேசுராஜ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார்.தெற்கு மாவட்டப் பொருளாளர் ஜெயவானமாமலை, தொகுதி பொருளாளர் சந்தனராஜ், தொகுதி இணைச் செயலாளர் சுடலைகண்ணு, தொகுதி செய்தித் தொடர்பாளர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வைத் திருவை நடுவண் ஒன்றிய தலைவர் சுடலைக்கண் ராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆழ்வை மேற்கு ஒன்றியச் செயலாளர் சுடலை, ஏரல் நகரத் தலைவர் ஜானகிராமன், ஆழ்வை மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் அருணாச்சலம், தொகுதி சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் லெட்சுமணன், ஆழ்வை மேற்கு ஒன்றிய இணை செயலாளர் ஜெபஸ்குமார், திருவை மேற்கு ஒன்றிய செயலாளர் ,சக்திவேல், திருவை கிழக்கு ஒன்றிய தலைவர் ஆதிராஜ், திருவை நகரத் தலைவர் பேச்சி ராஜா, திருவை நகரச் செயலாளர் சந்திரன் ஆழ்வை நகரச் செயலாளர் மோகன், திருவை மேற்கு ஒன்றிய தூணைசா செயலாளர் சுப்பையா, திருவை நடுவண் ஒன்றிய இளைஞர் பாசறைச் செயலாளர் அப்துல் பாயிஸ், ஆகியோர் கலந்துகொண்டனர்.


