தூத்துக்குடியில் ‘டெய்கின்’ நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
உலகின் முன்னணி ஜப்பானியத் தொழில்நுட்ப ஏர் கண்டிஷனிங் பிராண்டான ‘டெய்கின்’ நிறுவனத்தின் பிரத்யேக ஷோரூம், ஹரிஷ் ரெஃப்ரிஜிரேஷன் மூலம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. இப்புதிய பிரத்யேக ஷோரூமை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நிறுவனத்தின் தெற்கு மண்டல துணைத் தலைவர் முரளிதரன் கட்டாரி மற்றும் தமிழ்நாடு பி.ஜி.எம். அசோக் குமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
உலகின் முன்னணி ஜப்பானியத் தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஏர் ஸ்பெஷலிஸ்ட் நிறுவனமான டெய்கினின் முதல் பிரத்யேக ஷோரூம் தூத்துக்குடியில் எட்டையபுரம் ரோட்டில் சாமி பெட்ரோல் பங்க் அருகே அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்வையிட்டு அனுபவிக்கும் வகையில், அறை ஏசி, வணிக ஏசி மற்றும் குளிரூட்டும் அமைப்புகளின் நேரடி டிஸ்பிளே வசதிகள் இங்குச் செய்யப்பட்டுள்ளன.


