தூத்துக்குடியில், வீட்டில் வாஷிங் மிஷினில் பதுங்கியிருந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
தூத்துக்குடி அருகே கீழக்கூட்டுடன் காடு, அய்யனார் காலனியில் சேசையா என்பவர் தனது வீட்டில் பாம்பு நுழைந்துள்ளது. இதுகுறித்து அவர் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வீரர்க்ள சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் வெளியே இருந்த வாஷிங் மெஷின் கீழே பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பினை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.


