வல்லநாடு தம்பிராட்டி அம்மன் திருக்கோவில் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
இதற்காக அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது.
இந்த கும்பாபிஷேகத்திற்கு மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பிரமச்சாரியா சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தின் 103 வது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக சத்திரயனஞான பிரமச்சாரிய சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் பூரண கும்ப ஊர்வலம் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் மேல் உள்ள கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் பரிவார தேவதைகளுக்கும் அபிஷேகம் நடந்தது.
வல்லநாடு ஆவுடை அம்பாள் சமேத திருமூலநாதர் திருக்கோவில் ஸ்தானிகர் அர்ச்சகர், சண்முகசுந்தர பட்டர், கோமதி சங்கர பட்டர், வெங்கடேஷ் பட்டர் என்ற சந்தோஷ் பட்டர், ஹரி பட்டர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மகாகும்பாபிஷேக விழா நடந்தது.
இதில் பல்லாயிர கணக்கான பக்தர்களும், பொதுமக்களும், கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.


