வல்லநாட்டில் மிகவும் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ள மூர்த்தி திருமூலநாதர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த சிவ அன்பர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திருப்பணிகளைப் பார்வையிட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் வருகை தந்தார்.
திருமூலநாதர் பக்தர் பேரவையினர், சிவ அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து ஆதீனத்தை வரவேற்றனர்.
கோவிலில் நடைபெறும் திருப்பணிகளைப் பார்வையிட்ட பெருங்குளம் செங்கோல் ஆதீனம் இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற அருளாசி வழங்கினார்.


