தி நெல்லை டைம்ஸ் இல் வெளியான எழுத்தாளர் மு.வெ.ரா எழுதிய மனிதர்களை வாசிப்போம் தொடரின் முதல் பாகம் நேற்று நெல்லை பொருநை 5 வது புத்தக கண்காட்சியில் வெளியானது :-
நெல்லை பொருநை ஐந்தாவது புத்தக கண்காட்சியில் பத்தாவது நாளில் வெற்றிடம் பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர் மு.வெ.ரா வின் டவுன்லோடு மனசு புத்தகத்தை முனைவர் அலங்கார ராஜ் அவர்கள் வெளியிட எழுத்தாளர் மு.வெ.ரா அவர்கள் தாயார் லட்சுமி முருகன் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவை தலைமை தாங்கி திருநெல்வேலி வனப்பாதுகாப்புபடை உதவி பாதுகாப்பாளர் செல்வி ஹேமலதா அவர்கள் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார்.
அவர் பேசும்போது இந்தப் புத்தகம் எல்லா வயதினருக்கும் ஆனது எல்லோரும் படிப்பதற்கு ஏற்ற பல கருத்துக்கள் உள்ளன மனித உணர்வுகளை மிக அழகாக கையாண்டு மு.வெ.ரா எழுதியுள்ளார் என்று பேசினார்.
அடுத்து அறிமுக உரை நிகழ்த்திய வெற்றிடம் பதிப்பகம் பதிப்பாளர் திலீபன் அவர்கள் பேசும்போது மு.வே. ரா மிக நுணுக்கமாக உணர்வுகளை கையாளக் கூடியவர் இந்த புத்தகத்தில் பல விதமான விஷயங்களை மிக இயல்பாக அறிவுரை போலல்லாமல் ஒரு சிறு கதை போல் எல்லோருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார் என்று கூறினார்.
ஆசிரியர் முனைவர் அலங்கார ராஜ் அவர்கள் பேசும்பொழுது தன் மாணவன் ஆசிரியருக்கு அளித்த மிகப்பெரிய கவுரவம் இது என்று கூறி இந்த புத்தகம் எல்லோருக்குமானது அனைவரும் வாங்கி படியுங்கள் என்று கூறினார்.
ஏற்புரை வழங்கிய மு.வெ ரா பேசும்போது இந்தப் புத்தகத்தில் மனிதனுடைய பல்வேறு உணர்வுகளை எப்படி கையாள்வது என்பது குறித்து அழகாக எடுத்துரைத்து உள்ளேன் என்று பேசினார்.
வாழ்த்துரை வழங்கிய நெல்லை டைம்ஸ் நிர்வாக ஆசிரியரும் தேசிய வாசிப்பு இயக்கம் தலைவர் தம்பான் அவர்கள் பேசும்போது இந்த தொடர் பத்திரிக்கையில் வெளிவரும் போது வாசகர்களிடையே எவ்வளவு வரவேற்பு பெற்றவை என்பதை விரிவாகப் கூறினார்.
நிகழ்ச்சியை முனைவர் கவிஞர் கணபதி சுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவிஞர் முத்துசாமி செய்திருந்தார் விழா ஒருங்கிணைப்பை சுரேஷ் சிவா நடராஜ் ரகசியா ஸ்ரீ குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் விழாவில் துவக்கத்தில் திருமதி சங்கரி அவர்கள் தன்னம்பிக்கை பாடல் ஒன்றை பாடி அனைவரையும் கவர்ந்தார். இந்தப் புத்தகம் பொருநை நெல்லை ஐந்தாவது புத்தகக் கண்காட்சியில் 114வது அரங்கில் கிடைக்கும்.


