தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சரவணன், தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (28.03.2022) நடைபெற்றது.
இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 316 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் லேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


