
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் இரவு 7 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து கிளம்பும்.
இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கு முன்பு இரவு 8.20 மணி அளவில் ரயில் வந்து கொண்டிருந்த போது திடிரென்று அந்த வழியாக வந்த மாடுகள் மீது ரயில் மோதியது. இதில் 5 மாடுகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பாக திருநெல்வேலி ரயில்வே போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் பகுதியில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஒரு மூதாட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.