மேலசிரியந்தூர் கிராமத்தில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலசிரியந்தூர் கிராமத்தில் சிவகாமி அம்பாள் சமேத புரவரி ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று காலை மாபெரும் மாட்டு வண்டி போட்டிகள் நடந்தது.
இந்த பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி போட்டியில் 6 மாட்டு வண்டிகள் பங்கேற்றது. இந்த போட்டியை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இதற்காக எல்லை மேலசிரியந்தூரில் இருந்து தெற்கு காரசேரி வரை 8 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் முதல் பரிசை வள்ளியூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் மாடும், 2வது பரிசை சரண்யாபட்டி ஓட்டபிடாரமும், 3வது பரிசை சீவலப்பேரியைச் சேர்ந்த துர்காம்பிகா மாடும் வென்றது.
17 சிறிய மாட்டுவண்டிகள் கலந்து கொண்ட போட்டியை செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருள் தொடங்கி வைத்தார். இதற்காக மேலசிரியந்தூரில் இருந்து அரசர்குளம் பேருந்து நிலையம் வரை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வள்ளியூரைச் சேர்ந்த ஆனந்தும், 2வது பரிசை வல்லநாடு பங்களாவும், 3வது பரிசை கயத்தார் காந்திராஜ் மாடும் வென்றது.
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலிசார் செய்திருந்தனர்.