கோவில்பட்டி காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த தலைமைக் காவலரின் பைக்கை திருடியதாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவர் கவிதா. இவர், காவல் நிலைய வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என கடந்த புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி, பைக்கை திருடிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் மாரி செல்வம் (21), அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.


