தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் 4.47 லட்சம் மதிப்பிலான எலெக்ட்ரிக் ஆட்டோ இலவசமாக உடன்குடி புது இதயம் அறக்கட்டளையின் சேவை பணிக்காக வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் உள்ள புது இதயம் அறக்கட்டளையானது ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகள் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக இப்பகுதியைச் சுற்றியுள்ள13 கிராமங்களுக்கு நேரில் சென்று ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நேரில் சென்று சந்தித்து தினந்தோறும் உணவு வழங்கி சேவை செய்து வருகிறது.
புது இதயம் அறக்கட்டளையின் சேவை பணிகளுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகத்தின் சார்பில் எலெக்ட்ரிக் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிகளின் வணிக நிர்வாக மேலாளர் பி.ஆர். அசோக்குமார் மற்றும் நிர்வாகிகளின் ஒப்புதலின் அடிப்படையில் திட்டமிடல் உதவி பொது மேலாளர் சி. வெங்கடேசன் எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் அதற்கான ஆவணங்களை அறக்கட்டளையின் மேலாளர் பாக்கியராஜிடம் வழங்கினார். அறக்கட்டளையின் நிர்வாகி தே. திரவியராஜ் வெள்ளப்பழம் உடன் இருந்தார்.


