மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஏரல் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் மருந்து மற்றும் உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டிவரியை ரத்து செய்யவும் கேஸ் உரம் உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் மானியத்தை குறைத்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவைகுண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் கே பி ஆறுமுகம் சிறப்புரையாற்றினார் நிகழ்வில் திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் சாயர்புரம் செயலாளர் சுவாமி தாஸ் சாத்தான்குளம் ஒன்றிய பொறுப்புச் செயலாளர் முருகேசன் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் விவசாய சங்க திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஒன்றிய தலைவர் பொன்ராஜ் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன் கருப்பசாமி கட்டாலங்குளம் செயலாளர் கன்னியம்மாள் வள்ளியம்மாள் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்


