ஐயா வணக்கம்.
தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள் புத்தகம் வந்து சேர்ந்தது.மிக்க நன்றி. மிக சிரமப்பட்டு வரலாற்று நிகழ்வுகள் சேகரிக்கப்பட்டு, புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஈடுபட்ட அத்தனை பேரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள் என்றாலும், சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத மாவீரர்கள் என்ற தலைப்பில் ,வரிசை எண் 15 எம் .சி வீரபாகு பக்கம் 438 இல் உள்ளது.
இவர் சட்ட வரைவுக் குழுவிலும் பாராளுமன்றத்திலும் அந்நாளில் தமிழில் கையெழுத்திட்டவர் இவர் மட்டுமே என்று உள்ளது .இது முற்றிலும் உண்மை. ஆனால் எம்.சி என்று அவர் கையெழுத்து இட வில்லை.மு .சி என்று கையெழுத்திட்டு உள்ளார்.
சென்ற 2 4 .02 .23 அன்று நான் சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்ள மத்திய நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் நகல் வைக்கப்பட்டுள்ளது. அது எப்படி தயாரிக்கப்பட்டதோ அதனுடைய வடிவத்தில் அது உள்ளது .அதில் எட்டாவது ஷெட்யூல் ஆர்டிகள் 34 1 அண்ட் 351 தலைப்பில் லாங்குவேஜ் என்ற துணைத் தலைப்பில் 14 மொழிகளின் பட்டியல் உள்ளது.
இப்பட்டியலில் முதல் கையெழுத்து திருமிகு ஜவஹர்லால் நேரு என்று ஆங்கிலத்தில் கையெழுத்துட்டு உள்ளார்.இவரைத் தொடர்ந்து பலரும் அதில் கையெழுத்துட்டுள்ளனர் .கடைசியாக இடது புறத்தில் பெரோஸ் காந்தி அவரும் கையெழுத்திட்டு உள்ளார்.
இந்தபப் பட்டியலில் மூன்றாவது பக்கத்தில் மு.சி வீரபாகு என்று தமிழில் கையெழுத்து இடப்பட்டுள்ளது
.
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலாக கையெழுத்திட்டு உள்ளவர்களில் இவர் மட்டுமே தமிழில் கையெழுத்து இட்டு உள்ளார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
மற்றவர்கள் ஆங்கிலம் ,ஹிந்தி, உருது என்று பல மொழிகளில் கையெழுத்து இட்டு உள்ளார்கள்.
எனவே இவ்வளவு நேர்மையாகவும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தமிழன் என்பதை தமிழில் கையெழுத்திட்டு அவர் அப்போதே அறிவிப்பு செய்துள்ளார் என்பது எவ்வளவு பாராட்டுக்குரியது என்பது தெரிகிறது.
எனவே நீங்கள் வெளியிட்டுள்ள புத்தகத்தை மறு பதிப்பு செய்யும்போது இதை நீங்கள் குறிப்பிடலாம். மறுபடிப்பில் எம் .சி என்பதை எம் என்பது ஆங்கிலத்தில் உள்ளது அதை தமிழில் அவர் கையெழுத்து மு .சி என்று மாற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம் .
தி.வேணுகோபால்


