தூத்துக்குடியில், இரவு பகல் பாராது பணியாற்றிய வெளியூர் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்பை கனிமொழி எம்பி வழங்கினார்.
கன மழையினால் மிகவும் பாதிப்படைந்த தூத்துக்குடி மாநகரை தூய்மைப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நகராட்சி மற்றும் மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பராமல் இந்த பேரிடர் காலத்தில் தங்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டார்கள்.
அதில் ஒரு சிலர் தங்களின் ஊர்களுக்கு செல்வதை தொடர்ந்து அவர்களுக்கு சில தொகுப்புகளை மாநகராட்சியின் சார்பாக பாரளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார். இந்நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


