தூத்துக்குடியில் தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பாக 200பேருக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பாக பி அன்டு டி காலனி ஆசீர்வாத நகரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சாந்திலால் ஜெயின், பொது மேலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு கிராம வங்கியின் தலைவர் செல்வராஜ் மற்றும் மண்டல மேலாளர் ரமேஷ் வாசன் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பால், அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, மைதா, ரவை, சர்க்கரை, கடுகு, காய்கறிகள், நாப்கின், துண்டு,போர்வை, மெழுகு வர்த்தி, தீப்பட்டி போன்ற வெள்ள நிவாரண பொருட்கள் சுமார் 200பேர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு கிராம வங்கி மண்டல அலுவலக மேலாளர்கள் ஆசீர், சங்கர்ஜீவதாஸ், ரிச்சர்ட் மற்றும் மற்ற கிளைகளைச் சார்ந்த ஊழியர்கள தங்கமாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


