தூத்துக்குடி அருகே திருமணம் ஆகாததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம், லூக்காபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் பட்டுராஜ் (33). இவருக்கு குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைக்க பெண் பார்த்து வந்தனர். ஆனால் பெண் கிடைக்கவில்லையாம். திருமணம் தள்ளிப்போனதால் மனமுடைந்த பட்டுராஜ் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.