செய்துங்கநல்லூர், புனித வளனார் மீனவர் கல்வி அறக்கட்டளையின் சார்பாக இயங்கி வரும் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 39 வது ஆண்டு துவக்கவிழா நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் வரவேற்றார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, மேலாண்மை துறையைச் சார்ந்த இயக்குனர் அருட்தந்தை முனைவர் மைக்கேல் ஜான் மற்றும் செய்துங்கநல்லூர் புனித பிரகாசி அம்மாள் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜாக்சன் மரிய பிலிப் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
விழாவில் துறைத்தலைவர்கள் அமலன், ஜாய்ஸ் மேரி, பென் மேத்யூ ஆறுமுகசேகர், ஜான் செண்பகத்துரை, ஆசிரிய பெருமக்கள், ஆய்வக போதகர்கள், பணியாளர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் அருட்தந்தை மைக்கேல் ஜான் மற்றும் செய்துங்கநல்லூர் பங்கு தந்தை ஜாக்சன் மரிய பிலிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


