தூத்துக்குடியில் மின் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் வெள்ளி விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினார்.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு பணி நிரந்தரம் பெற்ற சுமார் 200 தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு மின் கழக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வெள்ளி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் பெரியசாமியின் 7 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தொழிற்சங்க தலைவர் ஆரோக்கியசாமி, துணைத்தலைவர் தி. பெத்துராஜ், துணைச் செயலாளர் சக்திவேல், பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


