ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் என்.எஸ்.எஸ் முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது.
முகாமினை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு எதிர்பாரதவிதமாக ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளித்திட தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் உத்தரவிட்டு இருந்தார்.
இதன்பேரில், என்.எஸ்.எஸ் மாணவ, மாணவியர்களுக்கு தீத்தடுப்பு மீட்பு குறித்த போலி ஒத்திகை பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மட வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு, கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
பயிற்சி முகாமில், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமைய…


