வல்லநாடு பாரதி பள்ளியில் இலவசகண் பரிசோதனை முகாம் வல்லநாடு , மார்ச் 27_ வல்லநாடு பாரதி பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது . நெல்லை சிட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை , நெல்லை சீட் அறக்கட்டளை சித்த மருத்துவமனை மற்றும் நெல்லை வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில் வல்லநாடு பாரதி மழலையர் தொடக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.முகாமில் வல்லநாடு மற்றும் சுற்று வட்டாரப் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை செய்தனர்.கண்புரை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.


