நாசரேத்தில் மகள் இறந்த சோகத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மூக்கிபீறியைச் சேர்ந்தவர் யோபு ஏசுவடியான். இவரது மனைவி புளோரா ஜான்சி (67) இந்த தம்பதியரின் மகள் கடந்த 2021ல் கொரோனா நோயால் உயிரிழந்து விட்டார். இதனால் புளோரா ஜான்சி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


