தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக வேடநத்தம் ஊராட்சி மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் : கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் 110 விதியின்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வாங்கிய மகளிர் சுயஉதவிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் கடன்களும் தள்ளுப்படி என 31.01.2021-ல் கூறப்பட்டதை உறுப்பினர்கள் நம்பி இருந்தனர். இப்பொழுது ஒரு குழுவில் சில உறுப்பினர்களுக்கு தள்ளுபடி என்றும், சில உறுப்பினர்களுக்கு நிபந்தனைப்படி தள்ளுபடி கிடையாது என்றும் வங்கி மூலம் தெரியவந்தது.
எங்களை வட்டி, அபராத வட்டி மற்றும் அசல் மற்றும் அசல் கடன் தொகை ஆகியவற்றை கட்ட சொல்லி வங்கியில் இருந்து தகவல் சொல்லுகிறார்கள். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன சொல்லப்பட்டதோ, அப்படியே அனைத்து உறுப்பினர்களுக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த மனுவை தமிழக முதல்வர் கவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


