தூத்துக்குடி தருவை மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சி தலைவர் சிறந்த சாதனையாளர்களுககு விருது வழங்கினார்.
இதில் பொன்சொர்ணா ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த பொதுத்தேர்தலின் போது 8 குறும்படத்தினை மாவட்ட நிர்வாகத்திற்காக எடுத்து கொடுத்தனர். அதில் பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். குறும்படத்தில் எழுத்தாக்கம் செய்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது வழங்கப்பட்டது.
முத்தாலங்குறிச்சி காமராசு நிகழ்ச்சிக்கு வர இயலாத காரணத்தினால் பொன் சொர்ணா நிர்வாகத்தின் இயக்குனர் பொன் சிவகாமி மாவட்ட ஆட்சி தலைவரிடம் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.