தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த சுடலைகண்ணு மகன் காசிபாண்டி என்பவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆதிச்சநல்லூர் பகுதியில் உள்ள, செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்திலிருந்து வாழை இலைகள் திருடு போயுள்ளது. இதனால் மாரியப்பன் அவரது தோட்டத்தில் உள்ள வாழை இலைகளை காசிபாண்டிதான் திருடியதாக தவறாக நினைத்து நேற்று காசிபாண்டி ஆதிச்சநல்லூர் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த மாரியப்பன் காசிபாண்டியிடம் இதுகுறித்து தகராறு செய்து அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து காசிபாண்டி இன்றையதினம் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார்.


