தூத்துக்குடியில் மூன்றாம் ஆண்டு புத்தகம் கண்காட்சி நடந்து வருகிறது. புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாளை முன்னிட்டு காலை 10 மணி முதல் 1 மணி வரை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலைத்திறன் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரிசல் குயில் கிருஷ்ணசாமி குழுவினர் நடத்தும் கரிசல் பாடல்கள் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு பேர் இசை கொற்கை என்னும் தலைப்பில் சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் களங்கள் என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் சுதாகர் அவர்களின் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை திருவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் சிவகளை ஆ.மாணிககம் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து செய்திருந்தது.


