ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ரெங்கராஜ திருமண மண்டபத்தில் காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி ரெங்கராஜ திருமண மண்டபத்தில் இன்று காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல்துணை கண்காணிப்பாளர் பேசுகையில், ஸ்ரீவைகுண்டம் பகுதி காவலர்கள் குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது, ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம், செய்துங்கநல்லூர், சேரகுளம், ஆழ்வார்திருநகரி, ஏரல், சாயர்புரம், குரும்பூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள், வழக்கு கோப்புகளை எழுதும் எழுத்தர்கள், சிறப்பு தனிப்படை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


