சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், குழந்தை வளர்ச்சி தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் தனலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தா, ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், அன்றோ, ஏரல் ஆரம்ப சுகாதாரநிலைய மாவட்ட அலுவலர் மகாகாசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ, வளையல், பழங்கள், சேலை, உள்ளிட்ட வளைகாப்பு சீதனங்களை எம்.எல்.ஏ.ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.
இதனை தொடர்ந்து, 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.
விழாவின் ஒரு பகுதியாக எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜின் 38வது பிறந்தநாளை முன்னிட்டு 38 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் நல்லக்கண்ணு, தாசன், முன்னாள் வட்டார தலைவர் சிங்கப்பன், வெள்ளூர் பஞ்சாயத்து தலைவர் குமார்பாண்டியன், இளநிலை உதவியாளர் சுப்பிரமணியன், வட்டார ஒருங்கினைப்பாளர் மாரியம்மாள், வட்டார திட்ட உதவியாளர் மாரிதங்கம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சீனிராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் எடிசன், மாவட்ட பொது செயலாளர்கள் அலங்கார பாண்டியன், பிச்சையா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், நகர தலைவர் சித்திரை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பிச்சைக்கண்ணு, வழக்கறிஞர் பிரிவு பாலசுப்பிரமணியன், வட்டார செயலாளர் மதிசேகரன், வார்டு தலைவர் நிலமுடையான், கிராம கமிட்டி தலைவர்கள் சந்திரன், நவாஸ், ஜெயராமன், கார்த்திக், சுடலை, ராஜதுரை, வட்டார மகளிரணி பஞ்சவர்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


