நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் இசக்கி பாண்டி. இவரது மனைவி கல்யாணி 43.
இவர்கள் நேற்று நள்ளிரவு மூன்று மணி அளவில் மகன் இமானுவேல் பிரபு மகள் ரம்யா ஆகிய நான்கு பேரும் தங்களது காரில் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர். செய்துங்கநல்லூர் வளைவு பகுதியில் கார் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் இசக்கி பாண்டி ரம்யா இமானுவேல் பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர் இதுகுறித்து தகவல் அறிந்து செய்து நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு படுகாயம் அடைந்தவர்களை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


