தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் காவல்நிலைய எல்லைக்குட்டப்பட்ட மகிழ்ச்சிபுரம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லையா மகன் வேதக்கண் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் பனையில் இருந்து இன்றைய தினம் சட்டவிரோதமாக பனங்கள்ளு இறக்கி விற்பனை செய்துள்ளார்.
இதுதொடர்பாக சேரகுளம் உதவி ஆய்வாளர் அல்லி அரசன் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.
அதே போல் அதே கிராமம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் கோயில் மகன் அந்தோணி. இவர் அந்த பகுதியில் பனைஏறும் தொழில் செய்து வருகிறார். அவரும் இன்று அந்த பகுதியில் சட்டவிரோதமாக பனையில் இருந்து பனங்கள்ளு இறக்கி விற்பனை செய்துள்ளார். இதுதொடர்பாக சேரகுளம் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி துரைசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


