தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும்டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் கருங்குளம் அருகேயுள்ள இராமானுஜம்புதூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமினை டி.வி.எஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர்.விஜயகுமார் துவக்கி வைத்தார்கள். மாவட்ட நலக் கல்வியாளர் ஆ.முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.
முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் வரவேற்று பேசினார்.
இம்முகாமில் 42 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 40 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார்.
இம்முகாமில் எக்ஸ்ரே நுட்பனர்கள் உடையார், கிறிஸ்டின் குமாரதாஸ், சுகாதார பார்வையாளர்முத்து லட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர் ரம்யா கோகிலா, சுகாதார தன்னார்வலர்கள்சிவ சகிலா, சுப்பு லக்ஷ்மி, செல்லப்பா, டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கிராம வளர்ச்சி அலுவலர்லசுப்ரமணியன், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.