தாமிரபரணி பற்றி அதிகமான நூல் எழுதியவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, இவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் மனு ஒன்றை நேரில் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த தமிழக அரசு நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த மாதம் கலியாவூரில் இந்த பணியை மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமிபதி தலைமையில் நமது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள் . அந்த பணி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் அவ்விடம் மிகப்பெரிய இடம். மேலும் தாமிரபரணி பணி செய்வது பெரிய அளவில் மக்கள் மத்தியில் தெரிந்து பிரபலமாகாது. எனவே தயவு கூர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஆழ்வார்திருநகரி பாலம் வரை இருகரையில் உள்ள முள்செடிகளையும், தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளையும் அமலைசெடிகளையும் அகற்றி, மரங்கள் நட வேண்டும். இதற்காக பலர் உதவ உள்ளனர் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாராம்பரிய முக்க வைணவத்தலங்களில் முதல் திருப்பதி (ஸ்ரீவைகுண்டம்) யில் இருந்து கடைசி திருப்பதி (ஆழ்வார்திருநகரி) வரை சுத்தம் செய்து நாம் பத்திரிக்கையில் விளம்பரம் படுத்தினால், தொடர்ந்து மற்ற பகுதியிலும் சுத்தம் செய்ய தன்னார்வ தொண்டர்கள் முன்வருவார்கள். அப்போது நாம் தாமிரபரணி பணியை செம்மையாக செய்ய ஏதுவாக இருக்கும். எனவே அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவண செய்வதாக வாக்களித்தார். மேலும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம் 3 19ம் நூற்றாண்டு ஆசான்கள் என்ற நு-லை அமைச்சரிடம் எழுத்தாளர் அறிமுகம் செய்தார். இந்த நூலின் வாழ்த்துரையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.