தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் குறைதீரக்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில், 50 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


