தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழநாட்டார்குளம் புனித சூசையப்பர் கோவில் ஆலயத்திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து 10 தினங்களும் காலையும், மாலையும் சிறப்பு திருப்பலி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று புனித சூசையப்பர் சப்பர பவனி நடந்தது. இதற்காக ஊரின் எல்லையில் உள்ள கெபி முன்பு இருந்து மிக்கேல் அதிதூதர், மாதா மற்றும் புனித சூசையப்பர் ஆலய சொரூபம் தாங்கி சப்பர பவனி நடந்தது.
இதில் பொதுமக்கள் உப்பு மிளகு வழங்கி ஆசி பெற்றனர். குழந்தைகளை மாதாவின் காலடியில் வைத்து ஆசி பெற்று பெற்றுக்கொண்டனர்.
இந்த சப்பர பவனி கீழநாட்டார்குளத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவில் முன்பு வந்து நிறைவு பெற்றது. அதன்பின்பு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


