இந்தியாவில் உயிர் துடிப்புள்ள நதி தாமிரபரணி நதி. அந்த நதியை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம். நம் கண் முன்னால் அந்த நதி அழிகிறது. அதை நாம் கை கட்டி வேடிக்கை பார்க்கிறோம். தாமிரபரணி நதி எப்பேற்பட்ட நதி சங்க காலத்தில் இலக்கியங்களில் பாடப்பட்ட நதி. நதியின் பெருமை நமக்கு தெரியவேண்டும் என நான் எழுதிய நவீன தாமிரபரணி மகாத்தியத்தில் இருந்து தினமும் ஒரு பகுதியை வீடியோவாக தருகிறேன். பார்த்து, மற்றவர்களுக்கு அனுப்புங்கள். நமது நதியை பாதுகாக்க சபதம் ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் நிச்சயம் நதியை காப்பாற்றலாம். நமது வெப்சைட்டை உலக நாடுகளில் 119 நாடுகளில் இருந்து பார்வையிடுகிறார்கள். ஆகவே அவர்களுக்கும் நமது தாமிரபரணி புகழ் தெரியட்டும். ஆதரவு தரும் உள்நாடு வெளிநாடு, வெளி மாநில வாசகர்களுக்கு நன்றி.நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


