
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று பணியில் இருந்த போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.அஜய் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


