துாத்துக்குடி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பாக நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேல்நிலைப் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் மையம் முன் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசி ரியர்கள் சங்க (DRPGTA) துாத்துக்குடி மாவட்ட கிளை சார்பில் கலை ஆசிரியர்களுக்கு அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பான நோட்டீஸ் நேற்று முன்தினம் காலை வழங்கப்பட்டு கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடந்தது.
1.6.2006க்கு பின் பணியில் சேர்ந்த நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தற்போதைய நிலையில் 14 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய இழப்போடு பணியாற்றி வருகின்றனர். இந்த ஊதிய முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் 2006க்கு பின் பணியில் சேர்ந்த நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கூட கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையை போக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மாநில துணைத்தலை வர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்டதலைவர் சங்கர சுப்பு வரவேற்றார். மாவட்ட பொருளாளர் இசக்கிதுரை முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் விக்னேஷ், ஜெசிந்த் சிந்தியா, பட்டு, அங்காள ஈஸ்வரி, சங்கரி, ஹேனா, பத்மா பாக்கிய குமாரி, செல்வி, ஜெசிந்தா, பாக்கியராஜ், முத்துக்கனி மற்றும் முதுகலை ஆசி ரியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


