ஆதிச்சநல்லூரில் அண்ணாமலை பல்கலைகழக வரலாற்று துறை தலைவர் ராஜன் பார்வையிட்டார். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் உள்ளது உள்ளபடியே என்ற நிலையில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடக்கிறது. இதை காண பல்வேறு இடங்களில் இருந்து ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். இன்று அண்ணாமை பல்கலைகழக வரலாற்று துறைத்தலைவர் ராஜன் பார்வையிட்டார். அவருக்கு ஆய்வாளர் அருண் விளக்கமளித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பேராசிரியர் ச. முருகவேள் , முனைவர் கந்த சுப்பு, முனைவர் ஜோசப்ராஜ் உள்படபலர் சென்றனர்.


