அறியப்படாத கிறிஸ்தவம் ஆய்வுநூல் அறிமுக விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா பாளையங்கோட்டை பெருமாள்புரம் மார்கன் அரங்கத்தில் நடைபெற்றது.
ஓய்வு பெற்ற பேராசிரியரும் தமிழ் எழுத்தாளரும் மற்றும் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலங்களுக்கான கத்தோலிக்கப் பேரவைச் செயலாளரான பேரா. வளன் அரசு நூலாசிரியர்.நிவேதிதா லூயிஸ் அவர்களிடம் முதல் பிரதியைப் பெற்று நூல் குறித்து சிறப்புரையாற்றி நூலை வெளியிட்டார்கள். கழி(ளி) யல் ஆட்டக்கலை தமிழ் சுவடிகள் – பேராசிரியர்.முனைவர். வே.கட்டளை கைலாசம் தமிழக பெண் கல்வெட்டு ஆய்வாளரும் கல்வெட்டியல் உயர் அலுவலருமான மார்க்சி காந்தி ஆகிய இருவரும் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள் இருவரும் சிறப்பான உரையாற்றினார்கள்
பெருமைமிகு பெண் விருதினை பெற்றுள்ள முனைவர் ஜான்சி பால்ராஜ், நல்லூர் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் சுரேஷ் சாலமோன் , ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன், கன்னியாகுமரி சுரேஷ் காணி மற்றும் நூலாசிரியர் நிவேதிதா லூயிஸ் அவர்களோடு தமிழகம் எங்கும் சென்று அறியப்படாத கிறிஸ்தவம் நூலுக்காக தரவுகளை சேகரித்த சகோதரி ரோடா அலெக்ஸ் , தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அருட்பணியாளர்கள் ஜேசு விக்டர், ஜான் சாமுவேல், திருநெல்வேலி திருமண்டல அருட்பணியாளர் கிப்சன் ஜான் தாஸ், திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்க நிறுவனர் மற்றும் கிறிஸ்தவ வரலாற்று சுவடுகள் பதிப்பாசிரியர் மன்னா செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தொடக்க ஜெபம் மைக்கேல் அவர்களால் செய்யப்பட்டது. விழா நிகழ்ச்சிகளை வில்பர்ட் துரை தொகுத்து வழங்கினார்கள். பிரான்சிஸ் சித்தர் , தலைமை ஒருங்கிணைப்பாளர் & தென்னக ரயில்வே ஓய்வு பெற்ற உயர் அலுவலர் ரவீந்திரன் என்ற ரயில் ரவி, தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல குருவானர் சாமுவேல் ஜெயசீலன், கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன், சாமுவேல் ராஜாசிங், கல்லிடைகுறிச்சி ஜான் ஞானராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


